ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை

ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை விடுக்கபட்டுள்ளது

Update: 2023-06-18 18:45 GMT

சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பல இடங்களில் உள்ள மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது. இங்கு சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகில் அதிக குடியிருப்புகளை கொண்ட பண்டாரம் காலனி தெருவில் குறுகிய சாலை பகுதியில் ஊன்றப்பட்ட மின்கம்பம் அடிப்பகுதியில் உடைந்து கம்பிகள் துருப்பிடித்து சாய்ந்த நிலையில் உள்ளது. மின்கம்பம் சாய்ந்தால் அருகில் உள்ள வீடுகள் மேல் விழுந்து மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதே போல் ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் சாலை உப்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள மின்கம்பம் சாயும் நிலையில் உள்ளது. மேலும் பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சரிந்து பெரும் விபத்தை ஏற்படுத்தும் என அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்