ஆடிப்பெருக்கு அன்று கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை

ஆடிப்பெருக்கு அன்று கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-07-14 18:30 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வஞ்சி மாநகரமான கரூர் மாவட்டம் காவிரி கரையோரம் உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காவிரி ஆற்று பாசன மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு அன்று காவிரியில் வழிபடுதல் நடைபெற்று வருகிறது. ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கான அடுத்த மாதம் 3-ந் தேதி அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. பெரும்பாலான வணிக நிறுவனங்களுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் ஒருநாள் கரூர் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்