கண்மாய், ஊருணிகளில் மீன் குத்தகை ஏலத்தை தடை செய்ய வேண்டும் கால்நடை வளர்ப்போர் கோரிக்கை

கண்மாய், ஊருணிகளில் மீன் குத்தகை ஏலத்தை தடை செய்ய வேண்டும் என கால்நடை வளர்ப்போர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது

Update: 2023-03-12 18:45 GMT

இளையான்குடி, 

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 56 கண்மாய்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஜமீன் கண்மாய்கள், கிராம ஊராட்சி ஊருணிகள் உள்ளன. கோடைகால விவசாயமான பருத்தி மற்றும் மிளகாய் விவசாயத்திற்கும், கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த கண்மாய் மற்றும் ஊருணிகள் விளங்குகின்றன. ஏற்கனவே இந்த நீர்நிலைகளை நம்பி இளையான்குடி ஒன்றியத்தில் 6 ஆயிரம் ஏக்டேர் பரப்பளவில் பருத்தி, மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சில கண்மாய்களில் உள்ள மீன்களை பிடிக்க ஏலம் விடப்போவதாகவும், அதற்காக மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீன் பிடித்தால் கண்மாயில் உள்ள தண்ணீரை வெளியேற்றி குறைவான தண்ணீரில் மீன் பிடிக்க முயற்சி செய்வார்கள். இதனால் விவசாயத்திற்கு பயன்படும் தண்ணீரும், கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாக உள்ள தண்ணீரும் வீணாகும் நிலை ஏற்படும். இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து மீன் குத்தகை ஏலத்தை தடை செய்ய வேண்டும் என கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்