பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்

பாலியல் தொந்தரவு ஏற்பட்டதால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.

Update: 2023-09-05 18:45 GMT

கள்ளக்குறிச்சி

விழிப்புணர்வு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் நாகலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 40 மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கி பேசும்போது, குழந்தைகளாகிய உங்களுக்கு குடும்பத்திலோ, பொதுவெளியிலோ அல்லது பள்ளியிலோ பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உங்கள் புகார் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து பாலியல் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஆலோசனை வழங்கிய அவர் காவல்துறையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் காவல்துறையில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

பாலியல் தொந்தரவு உள்ளதா?

பின்னர் பெண் போலீசார், சமூக நலத்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் ஆகியோரை கொண்டு மாணவிகளிடம் பொதுவெளியிலோ அல்லது பள்ளிகளிலோ ஏதேனும் பாலியல் தொந்தரவு உள்ளதா? என்பதை கேட்டறிந்தனர். இந்த முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, இன்ஸ்பெக்டர்கள் சுமதி, சுஜாதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார், சமூக நலத்துறையினர், குழந்தைகள் பாதுகாப்புதுறையினர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்