கலவரத்தில் சேதமான சாலை சீரமைப்பு
கனியாமூர் கலவரத்தில் சேதமான சாலை சீரமைக்கப்பட்டது.
சின்னசேலம்:
சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவுக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம், வன்முறையாக வெடித்தது. இந்த கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டு பஸ், வாகனங்கள், வகுப்பறைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
கலவரத்தின்போது பள்ளியின் முன்புள்ள சென்னை- சேலம், சேலம்-சென்னை 4 வழி தேசிய நெடுஞ்சாலையும், சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தகவல் பலகை, சாலையோர தடுப்புகள், சாலை விதி குறிப்பேடு பலகைகள் உள்ளிட்டவைகளும் சேதப்படுத்தப்பட்டன. இந்த சாலை, தடுப்பு கட்டைகள், தகவல் பலகை உள்ளிட்டவைகளை சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டனர்.