தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சீரமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சீரமைப்பு செய்யப்பட்டது.
கூடலூர்,
கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில் நாடார் சங்க திருமண மண்டபம் பகுதியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக சென்றது. இதனால் சரக்கு லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்கும் போது, மின் கம்பிகள் உரசும் அபாயம் காணப்பட்டது. இதனால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உயரம் குறைவாக இருந்த மின்கம்பத்துக்கு பதிலாக புதிய கம்பத்தை நட்டு, மின் கம்பிகள் உயரத்தில் செல்லும் வகையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். மேலும் மின்வாரிய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.