வீரட்டானேஸ்வரர் கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-09-30 18:43 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் கீழையூரில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பலத்த சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை ரூ.2 கோடியே 8 லட்சம் மதிப்பில் கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. அதன்படி வீரட்டானேஸ்வரர் மற்றும் அம்மன் சன்னதிகளில் உள்ள ராஜகோபுரங்கள், மதில் சுவர், வாகன மண்டபம், மடப்பள்ளி, தேர் நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சிலைகள் பாதுகாப்பு கட்டிடம், இடிதாங்கி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது கோவிலின் மேற்கூரை பகுதியில் ஓடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை கோவில் செயல் அலுவலா் அருள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணியை தரத்துடன் விரைந்து முடிக்க வேண்டும் என அங்கிருந்த ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது அறங்காவலர் குழு தலைவர் கோ.ஜெய்சங்கர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பா.சுப்பிரமணியன், ரேவதிஜெகதீஷ், எழுத்தர் து.மிரேஷ்குமாா் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்