கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் அகற்றம்
கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் அகற்றம்
வால்பாறை
வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் பணியாளர்கள் இணைந்து நகரில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் உதிரிபாகங்களை அகற்றினர். இதற்கு வால்பாறை நகர மக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர். இதுபோன்று கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் வால்பாறை நகர பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் கிடக்கிறது என்றும், அவைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் கூறுகையில், பயனற்ற நிலையில் கிடக்கும் வாகனங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நோய் பரப்பும் கொசுக்கள் உருவாகி வருகிறது. தற்போது சிறிய ரக வாகனங்களை அப்புறப்படுத்தி வருகிறோம். கனரக வாகனங்களை கிரேன் மூலம் தூக்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.