பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட கோவில் அகற்றம்

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட கோவில் அகற்றம்

Update: 2023-02-07 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டை அடுத்த தொழுவந்தாங்கலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கோவில் கட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், பெற்றோரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடபொன்பரப்பி போலீசார் சமாதான பேச்சவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று பிரச்சினைக்குரிய பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட கோவிலை சங்கராபுரம் தாசில்தார் சரவணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். அப்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்