ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. அப்போது நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-01 19:30 GMT

விழுப்புரம், 

ஆக்கிரமிப்பு

விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாக நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரிகள் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகளை நடத்தி வருவதாகவும், சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருவதாகவும் மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது. அதன்அடிப்படையில் நேற்று விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் போலீசார் மற்றும் நகராட்சி அமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், நகராட்சி சுகாதார துணை ஆய்வாளர் ரமணன், தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து, நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்த கடைகளை அகற்றினர்.

வாக்குவாதம்

தொடர்ந்து அவர்கள், கடைகளில் சுகாதார மற்ற முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழங்கள், தின்பண்டங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் பறிமுதல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதோடு, மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்தால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், சுகாதாரமற்ற முறையில் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்து சென்றனர். இ்ந்த சம்பவத்தால் பஸ் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்