வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2022-08-23 16:48 GMT

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார்கள். இதையொட்டி நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில் வேளாங்கண்ணி ஆர்ச்சில் இருந்து பேராலயம் வரை சாலையின் இருபக்கங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் பொக்லின் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.இந்த பணியை கீழ்வேளூர் தாசில்தார் (பொறுப்பு) அமுதவிஜயரங்கன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்