ஒகளூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
ஒகளூர் கிராமத்தில் 5 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் கோர்ட்டு உத்தரவின்படி அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஓகளூர் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து வாய்க்காலில் சில குறிப்பிட்ட பகுதி குடியிருப்பு பகுதியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனை அறிந்த குன்னம் தாசில்தார் அனிதா சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டார். அதன்பின்னர் கோர்ட்டு உத்தரவின் படி 5 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.