குரூப்-1 பதவிக்கு தேர்வானவர்களின் இறுதி பட்டியல் வெளியீடு

குரூப்-1 பதவிகளில் காலியாக இருந்த இடங்களில் 94 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன;

Update:2024-04-23 01:00 IST

கோப்புப்படம்

சென்னை,

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரி உதவி கமிஷனர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் காலியாக இருந்த 95 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு கடந்த 12-ந் தேதி நடந்து முடிந்தது.

இதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியலை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, துணை கலெக்டர் பதவிக்கு 21 பேரும், துணை போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு 25 பேரும், உதவி கமிஷனர் பதவிக்கு 25 பேரும், கூட்டுறவு சங்க துணை பதிவாளர் பதவிக்கு 13 பேரும், ஊரக மேம்பாடு உதவி இயக்குனர் பதவிக்கு 7 பேரும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பதவிக்கு 3 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் குரூப்-1 பதவிகளில் காலியாக இருந்த இடங்களில் 94 பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்