ரூ.40 லட்சத்தில் திருத்தேரி ஏரி சீரமைப்பு - கலெக்டர் தொடங்கி வைத்தார்

சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி ஏரி ரூ.40 லட்சத்தில் சீரமைப்பு பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-07 13:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி ஏரியை தனியார் நிறுவனம் மூலம் ரூ.40 லட்சம் செலவில் தூர்வாரியும், கரையை அகலப்படுத்தி சாலை அமைத்தும், கரையின் மீது 350 மரக்கன்றுகள் நடவும் முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணி நேற்று தொடங்கியது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலஷ்மி துரைபாபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன், ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் ஷாகிர் பாஷா, கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ், கதிரவன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் கே.பி.ராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ. வரலஷ்மி மதுசூதனன், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், ஆகியோர் கலந்துக்கொண்டு கொடியசைத்து பணியினை துவக்கி வைத்தனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்