கர்நாடக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுப்பு; காப்பிணி, குழந்தைகள் உயிர் இழப்புக்கு காங்கிரஸ் கண்டனம்

கர்நாடக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் தமிழக கர்ப்பிணி, குழந்தைகள் உயிரிழப்புக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-04 12:57 GMT

சென்னை,

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம், தும்குரு மாவட்டத்தில் ஆதார் அட்டை மற்றும் மாநில அரசின் தாய் அட்டை இல்லாததால் தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி என்ற கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே பிரசவமானதில் கஸ்தூரி என்ற இளம் பெண்ணும், அவருக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளும் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இரண்டு குழந்தைகளை சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கவேண்டுமென்றால் அந்த நேரத்திலும் அடையாள அட்டைகள் யாராவது கேட்பார்களா? இந்த கொடுமையால் மொத்தம் 3 உயிர்கள் போயிருக்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள். இதுதான் பா.ஜ.க. அரசு ஆளும் லட்சணமா? இந்த மனிதாபமற்ற, கொலைபாதக செயலை செய்த கர்நாடக அரசையும், அரசு மருத்துவமனை அதிகாரிகளையும் காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்