பா.ஜ.க. பேரணிக்கு அனுமதி மறுப்பு - காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

பா.ஜ.க. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-08-13 13:33 GMT

சென்னை,

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கோவை மாவட்ட பா.ஜ.க. செயலாளர் கிருஷ்ண பிரசாத் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறுகலான சாலை மற்றும் மேம்பால கட்டுமான பணிகள் காரணமாக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, யார் வேண்டுமானாலும் தேசிய கொடியை ஏந்திச் செல்லலாம் எனவும், வேண்டுமானால் எந்தெந்த இடங்களில் பேரணி செல்கிறார்கள் என்பது தொடர்பான விவரங்களை காவல்துறை அறிந்து வாகன நெரிசல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் முழுவதுமாக பேரணிக்கு அனுமதி மறுக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்