நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு குறைப்பு - மின்சார வாரியம் அதிரடி முடிவு

மின்துறை அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பை குறைக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

Update: 2022-10-31 09:28 GMT

சென்னை,

மின்துறை அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 2 ஆயிரமாக குறைக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் ஆன்லைன் வழியாகவும், இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமின்றி நேரடியாக மின் துறை அலுவலகங்களிலும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மின்வாரிய அலுவலகங்களில் பணி சுமையை குறைப்பதற்காக, மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்களால் கட்டக்கூடிய அதிகபட்ச கட்டணம் என்பது ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 2 ஆயிரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பரிந்துரை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, மின்சார வாரியம் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் விரைவில் மின்துறை அலுவலகங்களில் செலுத்தப்படக்கூடிய அதிகபட்ச கட்டணம் ரூ. 2 ஆயிரமாக குறைக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்