திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சிவகங்கை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது

Update: 2023-06-03 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை நகர சபை தலைவர் துரை ஆனந்த் ஆணையாளர் பாண்டீஸ்வரி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை நகராட்சி பகுதிகளில் 100 கிலோவிற்கு மேல் நாளொன்றுக்கு திடக்கழிவுகள் உருவாக்கக்கூடிய கட்டிடங்களை பயன்படுத்தும் அரசு, அரசு துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் மருத்துவமனைகள் மருத்துவ சிகிச்சை நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு அரங்குகள், விளையாட்டு வளாகங்கள், துணி விற்பனையகங்கள், உணவு விடுதிகள், வியாபார நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் 500க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பயிற்சி நிறுவனங்கள் ெரயில் நிலையம், பஸ் நிலையம், 300க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட வளாகம், மத்திய மாநில அரசு வீட்டு காலணிகள் குடியிருப்பு நலச்சங்கம் மற்றும் சந்தை ஒப்பந்தம் எடுத்தோர் ஆகியோர் நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்கள் வளாகத்திற்குள் உருவாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு வசதியாக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அவ்வாறு ஏற்படுத்தாத நிறுவனங்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்