திருத்தணி முருகன் கோவில் அருகே குளத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை

திருத்தணி முருகன் கோவில் அருகே குளத்தில் பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-12 08:04 GMT

முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த கோவிலுக்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான படாசெட்டி அம்மன் குளம் உள்ளது.

நேற்று காலை குளத்தில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கதக்க பெண் பிணம் அழுகிய நிலையில் மிதப்பதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற திருத்தணி போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?, கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பெண் குளிக்க செல்லும் போது குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரனை நடைப்பெற்று வருகிறது.

பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 32). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வினோத் வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வினோத் மனைவி அருணா பொன்னேரி போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்