நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, உறுதி மொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.