தஞ்சையில், சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சையில், சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-04-12 19:51 GMT

தஞ்சையில் சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சமசர நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி சமரச நாள் விழாகடந்த 10-ந்தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று சமரள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தாமார்ட்டின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் தஞ்சை மாவட்ட சமரச மையத்தின் மாவட்ட தலைவர் நீதிபதி இந்திராணி, ஒருங்கிணைப்பாளர் நீதிபதி தங்கமணி மற்றும் நீதிபதிகள், மீடியேட்டர்கள், வக்கீல் ராஜேஸ்வரன், வக்கீல் சங்க செயலாளர் சசிகுமார், முன்னாள் தலைவர் ஜீவக்குமார் மற்றும் வக்கீல்கள் நீதிமன்ற ஊழியர்கள் வழக்காடிகள் மற்றும் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட முதன்மை நீதிபதி பங்கேற்பு

முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் சமரச தீர்வு பற்றியும், சமரச மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமரச மையத்தில் நேரடியாக சமசர பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது குறித்தும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையத்திற்கு அனுப்புவது தொடர்பாக விளக்கி கூறினார். மேலும் இதன் மூலம் உகந்த தீர்வுகளை எட்டுவது குறித்தும், சமரச மையத்தினால் நேரடி பேச்சு வார்த்தைகளில் மனித உறவுகளையும், சமூக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் பேசினர்.

ஊர்வலம் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் இருந்து தொடங்கி ராமநாதன் மருத்துவமனை பஸ் நிறுத்தம் மற்றும் மணிமண்டபம் வழியாக அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சென்றடைந்தது. இதில் மாணவர்கள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட சமரச மையத்தின் நோடல் அதிகாரி ஆரோக்கியராஜ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்