ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை

கோவையில் வீடு கட்டி தருவதாக கூறி 65 பேரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-12-27 18:45 GMT

கோவை

கோவையில் வீடு கட்டி தருவதாக கூறி 65 பேரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இடத்துடன் கூடிய வீடு

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். எலெக்ட்ரீசி யன். இவருடைய மனைவி கீதாமணி. இவர்கள் சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்தனர்.

இது தொடர்பாக அவர்கள், கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் பேரூர் காளம்பாளையத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தை அணுகினர்.

அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெகதீஸ் வரன், 30 சதவீதம் பணம் செலுத்தினால் தங்களது நிறுவனம் சார்பில் இடத்துடன் வீடு கட்டித்தருவதாகவும், மீதி தொகை வங்கி மூலம் கடன் வசதி செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

ரூ.6.30 லட்சத்திற்கு காசோலை

இதை நம்பிய அவர்கள் 2 தவணைகளாக ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்தை ஜெகதீஸ்வரனிடம் வழங்கினர். உடனே அவர்களுக்கு தீத்திபாளையம் பகுதியில் வீடு கட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் நிலம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் வீடு கட்ட கீதா மணி மற்றும் குடும்பத்தினர் பூமிபூஜை செய்தனர்.

அதே இடத்தில் 2 நாட்கள் கழித்து மற்றொரு குடும்பத்தினர் வீடு கட்ட பூமி பூஜை போட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா மணி, ரவிச்சந்திரன் ஆகியோர் ெஜகதீஸ்வரனிடம் கேட்டனர்.

உடனே அவர் ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்திற்கு காசோலையை அவர்களிடம் வழங்கினார். அதை கீதாமணி வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் காசோலை திரும்பி விட்டதாக தெரிகிறது.

4 பேர் கைது

இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கீதாமணி, ரவிச்சந்திரன் ஆகியோர் ெகாடுத்த புகாரின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் வீடு கட்டி தருவதாக கூறி 65 பேரிடம் ரூ.3 கோடி பண மோசடி செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் ஜெகதீஸ்வரன், விஜயகுமார், முகமது ரபி, உமாதேவி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை

இது தொடர்பான வழக்கு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் ஜெகதீஸ்வர னுக்கு 10 ஆண்டு சிறையும் ரூ.3 கோடியே 30 ஆயிரம் அபராத மும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய விஜயகுமார், முகமது ரபி, உமா தேவி ஆகிய 3 பேரை விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

மேலும் செய்திகள்