தளி
உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் .கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். குரல்குட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.அதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.