ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு சி.ஐ.டி.யு. சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியாண்டி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில செயல் தலைவர் அசோகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ராமர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி 31 சதவீதத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.