மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-20 21:24 GMT

தென்காசி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் சேர்ந்தமரம் கல்லாம்புளி பஸ்நிறுத்தம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த பொய்கை கோவிலாண்டனூர் சார்லஸ் மகன் குரு திவாகர் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்