இளம்பெண் பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது

பரப்பாடி அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-11 02:04 IST

இட்டமொழி:

நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் வேல்ராமன் மகன் மதியழகன் (வயது 20). இவர் இளையார்குளத்தில் மோட்டார்சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதமாக மதியழகன் பரப்பாடி அருகே உள்ள ஊரில் தனது தாத்தா வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த மனநலம் பாதித்த 20 வயது இளம்பெண்ணை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மதியழகனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்