மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்தவருக்கு 8 ஆண்டு சிறை

அண்ணன் மகள் என்றும் பாராமல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்தவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-07-11 18:45 GMT

அண்ணன் மகள் என்றும் பாராமல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்தவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கற்பழிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(வயது 50). இவருடைய அண்ணனுக்கு 22 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் உள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் வீட்டின் பின்பகுதியில் தனியாக இருந்தார். அப்போது அவரின் சித்தப்பாவான வெள்ளைச்சாமி அங்கு சென்று தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை தனது அண்ணன் மகள் என்றும் பாராமல் கற்பழித்தாராம்.

அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை விரட்டி அடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைச்சாமியை கைது செய்தனர்.

8 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கோபிநாத், குற்றம்சாட்டப்பட்ட வெள்ளைச்சாமிக்கு 8 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்