மரகட்டா வனப்பகுதியில்மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றிய வனத்துறையினர்

Update: 2023-05-12 18:24 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே மரகட்டா காப்புக்காட்டில் யானைகள், மான்கள், சிறுத்தை, மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தேன்கனிக்கோட்டை வழியாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்பவர்கள் மரக்கட்டா வனப்பகுதியில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு வனப்பகுதியை பார்வையிடுவது வழக்கம். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில் மற்றும் குப்பைகளை வனப்பகுதியில் விட்டு செல்கின்றனர். மேலும் சிலர் வனப்பகுதியில் அமர்ந்து மது குடித்து விட்டு பாட்டில்களை வீசி செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் பெய்த மழையால் ஆங்காங்கே உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளன. இதனால் விலங்குகள் வனப்பகுதிக்கு தண்ணீர் குடிக்க செல்லும்போது குப்பை மற்றும் மதுபாட்டில்களால் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன், வனவர் வேணு தலைமையிலான வனக்குழுவினர் காப்புக்காட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் காலி மதுபாட்டில்களை அப்புறப்படுத்தினர். இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் வனத்துறை ஊழியர்களை பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்