ராமேசுவரம், தொண்டியில் உள்வாங்கிய கடல்

ராமேசுவரம், தொண்டி பகுதியில் கடல் உள்வாங்கியது.

Update: 2023-09-16 18:45 GMT

தொண்டி

ராமேசுவரம், தொண்டியில் கடல் உள்வாங்கியது.

கடல் உள்வாங்கியது

ராமநாதபுரம் அருகே தொண்டியில் நீண்ட கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையை பிரபாகரன் பீச் என அழைக்கின்றனர்.

நேற்று இங்கு புதுக்குடி கிராமம் முதல் மகாசக்திபுரம் கிராமம் வரை கடல் உள்வாங்கி காணப்பட்டது. அதாவது, சுமார் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கி இருந்தது.

இதனை அப்பகுதி மக்கள், மாணவ, மாணவிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் தங்களது செல்போன்களில் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

கடல் உள்வாங்கியதால் அங்கு நிறுத்தி இருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி நின்றன. இதனால் படகுகள் அனைத்தும் வழக்கமாக நிறுத்தும் இடத்தை விட்டு சுமார் 300 மீட்டர் தூரம் கடலின் உள்ளே நிறுத்தப்பட்டன.

தரைதட்டிய படகுகள்

இதே போல் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக நேற்று பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலானது மணல் பரப்பாக மாறியதால் மீன்பிடி படகுகள் தரைதட்டி நின்றன.

Tags:    

மேலும் செய்திகள்