திருப்பரங்குன்றம் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் - ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.வழங்கினார்

திருப்பரங்குன்றம் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. அன்னதானம் வழங்கினார்

Update: 2023-04-09 20:14 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி மதுரை புறநகர் அ.தி.மு.க கிழக்கு மாவட்டம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.. முன்னதாக மகா தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு திருக்கண் அமைத்து வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் ராஜ் சத்யன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், வட்டச்செயலாளர்கள் எம்.ஆர்.குமார், பொன்முருகன், பாலா என்ற பாலமுருகன், திருநகர் பாலமுருகன், சுப்பிரமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாக்கிலிப்பட்டி பாலமுருகன், நெல்லையப்பபுரம் பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார் மற்றும் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர், வக்கீல் ரமேஷின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். காலை 6.30 மணியில் இருந்து பகல் 12.30 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்