வைரமுடி அலங்காரத்தில் ராஜகோபாலசாமி

வைரமுடி அலங்காரத்தில் ராஜகோபாலசாமி

Update: 2023-04-23 18:45 GMT

அட்சய திருதியை நாளில் ஆண்டுதோறும் மன்னார்குடி ராஜகோபாலசாமி வைரமுடி அலங்காரத்தில் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டு கோவில் வாசலில் உள்ள அகோபில மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். வழக்கம்போல இந்த ஆண்டு நேற்று அட்சய திருதியை என்பதால் ராஜகோபாலசாமி வைரமுடி அலங்காரத்தில் பல்லத்தில் எடுத்து செல்லப்பட்டு அகோபில மண்டபத்தில் வைக்கப்பட்டு அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ராஜகோபாலசாமியை வழிபட்டனர். அதேபோல் அட்சய திருதியையொட்டி வடுவூர் கோதண்டராமர் கோவிலில் கருடசேவை நடைபெற்றது. அப்போது கருடசேவையில் கோதண்டராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்