வீடுகளை சூழ்ந்த மழைநீர்

வீடுகளை மழைநீர் சூழ்ந்தது

Update: 2022-10-16 20:32 GMT


மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட முழுவதும் உள்ள குடியிருப்பு விரிவாக்க பகுதிகளிலும், புதிதாக குடியிருப்பு அமைக்கப்பட்டு உள்ள இடங்களிலும் மழை நீர் குளம் போல் ஆங்காங்கே தேங்கியுள்ளது. சென்றுவர சாலை வசதிகளும் இல்லை. அதேபோல் திருப்பாலை வேல்நகர் விரிவாக்கம், ஸ்ரீராம் நகர் பகுதியில் மழையினால் 2 அடி ஆழத்திற்கு மழைநீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி உள்ளது. அந்தபகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேவர முடியாத நிலையில் உள்ளார்கள். தண்ணீர் வடிவதற்கு வாய்க்கால் வசதிஇல்லை. எனவே போர்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றினால் தான் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியும். மேலும் சுற்றுச்சூழல் மாசுபட்டு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்