குடியிருப்பிற்கு மத்தியில் கழிவு நீருடன் தேங்கி கிடக்கும் மழைநீர்; பொதுமக்கள் அவதி
விக்கிரமசிங்கபுரம் அருகே குடியிருப்பிற்கு மத்தியில் கழிவு நீருடன் தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி விநாயகர் காலனி பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் விநாயகர் காலனி 3 -வது தெருவில் தற்போது பெய்த தொடர் மழையால் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பிற்கு மத்தியில் தேங்கி கிடக்கிது. மேலும் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால், ஏற்கனவே இப்பகுதி சேறும், சகதியுமாக காட்சியளித்த நிலையில் தற்போது மழைநீரும் கலந்ததால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதே பகுதியில் கடந்த ஆண்டும் கனமழையால் வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்த நிலையில் தொடர் கதையாகி வருவதால் இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.