ஆரணி ஆற்றின் குறுக்கே ஆண்டார்மடம் சாலை மழையால் சேதம்

ஆரணி ஆற்றின் குறுக்கே ஆண்டார்மடம் சாலை மழையால் சேதமடைந்துள்ளதால் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-03 10:11 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றின் குறுக்கே ஆண்டார்மடம் என்ற இடத்தின் வழியாக காட்டூர் கடப்பாக்கம் ஆண்டார்மடம் சாலை பழவேற்காடு நெடுஞ்சாலையில் இணைகிறது. இந்த சாலை கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்தின் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. சீரமைப்பு பணிக்காக சாலையில் ராட்சத குழாய்களை ஆற்றில் அமைத்து மணலால் சாலையாக உருவாக்கும் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் இந்த சாலை மழையினால் சூழப்பட்டு மண்ணரிப்பால் சாலை சேதம் அடைந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆரணி ஆற்றின் குறுக்கே செல்லும் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்