வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை

வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

Update: 2023-05-03 19:15 GMT

வேதாரண்யம் பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இந்த நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரம் கன மழை வெளுத்து வாங்கியது. இடியுடன் பெய்த இந்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, சிறுதலைக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களில் ஏற்கனவே மழை நீர்சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையால் உப்பளங்களில் இருந்து மழைநீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உப்பளங்களில் மீண்டும் உப்பு உற்பத்தி பணி தொடங்க குறைந்தபட்சம் 3 வாரங்களாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இந்த மழை மா, முந்திரி, சவுக்கு, தென்னை போன்ற பயிர்களுக்கு ஏற்றதாக இருப்பதாகவும், எள், உளுந்து, சணல் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் விவசாயிகள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்