தர்மபுரி மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று மாலை தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் நேற்று இரவு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. பெரும்பாலான ஏரிகள், குட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.