ரெயில்வே ஓய்வூதியர் சங்க கூட்டம்

கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-08 10:29 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை தலைவர் ஏ. அருமைராஜ் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ஹரிஹர சுப்பிர மணியன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் தங்கவேலு, மகளிர் அணி தலைவர் பட்டம்மாள், கே. உதயசங்கர், துணை பொருளாளர் நாராயணன் ஆகியோர் தீர்மானங்களை விளக்கி பேசினர்.

கூட்டத்தில், பாராளுமன்ற நிலை குழுவின் 110வது அறிக்கையில் பரிந்துரைத்த மருத்துவ வசதிகள் அனைத்து நகரங்களிலும் இல்லாத காரணத்தால், நிலையான மருத்துவப்படி ரூ.1000-ல் இருந்து ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்த வேண்டும். மத்திய அரசு மருத்துவ திட்டத்தில் பதிவு செய்துள்ள ஓய்வூதியதாரர்கள் அவ்வாறு பெறக்கூடிய சிகிச்சையின் மருத்துவச் செலவை அரசு ஈடு செய்ய வேண்டும்.

பென்ஷன் விதிகளை முறைப்படுத்தி வருமான வரி செலுத்து வதில் இருந்து ஓய்வூதிய தாரர்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் முருகையா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்