நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே அவ்வை வழி ரெயில்வே கேட் உள்ளது. நேற்று காலை சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி பயணிகள் ரெயில் ஒன்று சென்றது. இதனால் அவ்வை வழி ரெயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது வேகமாக வந்த கார் மூடி கொண்டிருந்த ரெயில்வே கேட் மீது மோதி, அங்கிருந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதனால் ரெயில்வே கேட் சேதமானது. மேலும் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களும் சேதமாகின. இதுகுறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.