ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

Update: 2023-04-11 00:18 GMT

தெற்கு ரெயில்வே ஊழியர்கள் சங்கம் (எஸ்.ஆர்.எம்.யு) சார்பில் ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள மின்சார பராமரிப்பு முதுநிலை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஈரோடு கோட்ட பொறுப்பாளர் தர்மன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் ராஜேந்திரன், துணைச்செயலாளர் மயில்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ரெயில்வே எலக்ட்ரிக்கல் தொழிலாளர்களின் பணியிடங்களை சரண்டர் செய்யக்கூடாது. நிரப்பப்படாமல் இருக்கும் 90 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 'அவுட்சோர்சிங்' என்ற பெயரில் தனியாரிடம் பணிகளை ஒப்படைக்க கூடாது. பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்