பேக்கரியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சாக்லெட்டில் புழு இருந்த புகார் தொடர்பாக பேக்கரியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Update: 2022-08-14 18:23 GMT

அனுப்பர்பாளையம்,ஆக.15-

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் டேனியேல். இவர் கடந்த 10-ந்தேதி மாலை அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் குடோன் அருகே உள்ள ஒரு பேக்கரியில் ரூ.5 விலையில் சாக்லெட் 2 வாங்கினார். அதில் ஒரு சாக்லெட்டை சாப்பிட்ட போது நாக்கில் ஏதோ ஒன்று நெளிவது போன்று இருந்துள்ளது. இதையடுத்து வாயில் இருந்த சாக்லெட்டை வெளியே எடுத்து பார்த்த போது அந்த சாக்லெட்டில் ஒரு பெரிய புழு ஒன்று உயிருடன் நெளிந்த நிலையில் இருந்தது.இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் மறுநாள் வெளியானது. இதன் தொடர்ச்சியாக சமூக ஆர்வலர் நாஞ்சில் கிருஷ்ணன் 'தினத்தந்தி' செய்தியை மேற்கோள்காட்டி இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு ஆன்லைன் மூலமாக புகார் செய்தார்.இதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த கடையில் ஆயிரக்கணக்கில் சாக்லெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. சில சாக்லெட்டுகளை ஆய்வுக்காக எடுத்து சென்ற அதிகாரிகள், அவை காலாவதியானவையா என்று சோதனை செய்தனர். அந்த பேக்கரிக்கு உணவு தரக்கட்டுப்பாடு லைசென்சு இல்லாததால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் கெட்டுப்போன, பாதுகாப்பு இல்லாத உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்