ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.

Update: 2023-06-19 18:36 GMT

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த விழாவிற்கு செந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கொளஞ்சிநாதன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில காங்கிரஸ் துணை தலைவர் டாக்டர் மணிரத்னம் கலந்து கொண்டு செந்துறை ஒன்றியத்தில் உள்ள 15 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 படித்து முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களை கல்வியே முன்னேற்றும். அதனால் தான் ராகுல் காந்தி பிறந்தநாளில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தோம். இந்த உதவிகளை பெறும் மாணவர்கள் ராகுல் காந்தி பிரதமராக வாழ்த்த வேண்டும். அவர் பிரதமர் ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம் கிடைக்கும். இதுவரை 30 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து உள்ளேன். எனது வாழ்நாளில் 60 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று உறுதி ஏற்றுள்ளேன், என்றார். முடிவில் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்