சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-05-13 16:50 GMT

கோப்புப்படம்

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்து, 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழலில்

அமைச்சர் நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். மேலும், திமுக எம்பி டிஆர் பாலுவின் மகனும், கட்சி நிர்வாகியுமான டிஆர்பி ராஜாவை தொழில்துறை அமைச்சராக நியமனம் செய்தார். தொடர்ந்து, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோரின் துறைகளும் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் துறை மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்., உள்துறை செயலாளராக நியமனம்

முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் நிதித்துறை செயலாளராக மாற்றம்

நிதித்துறை செயலாளராக இருக்கும் முருகானந்தம், முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளராக மாற்றம்

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக நியமனம்

கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்துறை செயலாளராக இருந்த பணீந்திர செட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக மாற்றம்

போக்குவரத்துத்துறை செயலர் கோபால், கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீரமைப்பு ஆணையராக நியமனம்

சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன், பொதுப்பணித்துறைச் செயலாளராக மாற்றம்

சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளராக நியமனம்

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைச் செயலாளராக டி.ஜெகன்நாதன் நியமனம்

கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்