ரேபிஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்

குன்னூரில் ரேபிஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2023-05-05 05:30 GMT

குன்னூர்

உலகலாவிய கால்நடை மருத்துவ சேவை நிறுவனத்தின் சார்பில் ரேபிஸ் என்று அழைக்கப்படும் வெறிநாய்க்கடி நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் குன்னூரில் உள்ள அந்தோணியார் தொழிற்பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது. தூய அந்தோணியார் தொழிற்பயிற்சிப் பள்ளி முதல்வர் ஆனந்த் வரவேற்றார்.

உலகலாவிய கால்நடை மருத்துவ சேவை நிறுவனத்தின் கல்வி அலுவலர் வரதராசன் ரேபிஸ் விழிப்புணர்வு குறித்து பேசினார். தொடர்ந்து உலகளாவிய கால்நடை மருத்துவ சேவை நிறுவன சர்வதேச பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் இலோனா ஒட்டர் பங்கேற்பாளர்களின் மிருக கருத்தடை மற்றும் ரேபிஸ் கட்டுப்பாடு பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதில் தையல் கலை பயிலும் மாணவியர், ஆசிரியர் பயிற்சி மாணவியர், தொழிற்பயிற்சி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஐஸ்வர்யா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்