திருமயம் அருகே பெருந்துறையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் நல்லிபட்டி கிராமத்தை சேர்ந்த மதியழகன் (வயது 42) என்பவர் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் 28-ந் தேதி பணியில் இருந்த போது குவாரியில் இருந்த கல் அவரது தலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மதியழகன் மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மதியழகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.