தூய்மை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுரண்டை நகராட்சி சார்பில் தூய்மை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-17 12:13 GMT

சுரண்டை:

சுரண்டை நகராட்சியில் மக்கள் பணிக்கான தூய்மை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி சுரண்டை மகாத்மா காந்தி பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் எஸ்.பி.வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கராதேவி முருகேசன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் பாரிஜான் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம், தூய்மை பணிக்கான மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து ஆணையாளர் உறுதிமொழி வாசிக்க மஸ்தூர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து சுரண்டை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலம் அண்ணாசிலை வழியாக நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி தேவேந்திரன், அருணகிரி சந்திரன், பாலசுப்பிரமணியன், கல்பனா அன்ன பிரகாசம், உஷா பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்