திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியில் நலத்திட்ட பணி

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியில் நலத்திட்ட பணி

Update: 2022-06-03 15:59 GMT

திருப்பூர்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியில் நலத்திட்ட பணிகளை கலெக்டர், மேயர், எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

ரூ.36 கோடியில் நலத்திட்டப் பணிகள்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, செல்வராஜ் எம்.எல்.ஏ., துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ரூ.30 கோடியே 35 லட்சம் மதிப்பில் 41 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.38 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தனர்.

மேலும் மொத்தம் ரூ.36 கோடியே 5 லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தீவிர தூய்மைப்பணி

இதைத்தொடர்ந்து செல்லாண்டியம்மன் துறை வீட்டுவசதி வாரிய பகுதியில் தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாமை தொடங்கிவைத்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் மரக்கன்று நட்டனர். மாநகராட்சி பகுதியில் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தூய்மைப்பணி நடைபெறுகிறது. வருகிற 11-ந் தேதி, 25-ந் தேதிகளில் மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப்பணி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், உமாமகேஸ்வரி, கோவிந்தசாமி, கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, ராதாகிருஷ்ணன், பிரேமா, பத்மாவதி, அனுஷ்யாதேவி, மாநகராட்சி அதிகாரிகள், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பல்லடம்

பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அதன் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய பொறுப்பாளர் சோமசுந்தரம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதேபோல கணபதிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற விழாவில் ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி, சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி, விமல் பழனிச்சாமி, ராஜேஸ்வரன், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆலூத்துப்பாளையம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா, அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

அரசு மருத்துவமனை

பல்லடம் நகர தி.மு.க. சார்பில், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ரொட்டி, பால், பழம், பிஸ்ெகட், போன்றவற்றை நகர தி.மு.க. பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜசேகரன், நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷ், குட்டி பழனிச்சாமி, நடராஜ், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பல்லடம் 2வது வார்டு சேடபாளையத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் 2-வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான ராஜசேகரன் ஏற்பாட்டில், துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு, நாற்காலிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்