புனிதராயப்பர் சின்னப்பர் ஆலய தேர்பவனி

புனிதராயப்பர் சின்னப்பர் ஆலய தேர்பவனி நடந்தது.

Update: 2023-05-08 18:58 GMT

தரகம்பட்டி அருகே சின்னாண்டிப்பட்டியில் புனித ராயப்பர் சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தின் இரவு தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித ராயப்பர் சின்னப்பர் எழுந்தருளினார்கள். தொடர்ந்து திரளான கிறிஸ்தவர்கள் சப்பரங்களை முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். தொடர்ந்து சப்பரங்கள் ஆலயத்திற்கு வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்