மாணவனுக்கு ஐகோர்ட்டு நூதன தண்டனை

மாணவனுக்கு ஐகோர்ட்டு நூதன தண்டனை வழங்கியது.

Update: 2022-10-19 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் கல்லூரி சாலையில் இரு மோட்டார் சைக்கிள்களில் சாகசங்களை நிகழ்த்தினர். அப்போது ஒரு மாணவர் மோட்டார் சைக்கிளில் ஏறி நின்றபோது கீழே விழுந்தார். மற்ற மோட்டார் சைக்கிளில் இருவர் அதே போல் சாகசத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ வைரலாக பரவியதால் காரைக்குடி அழகப்பாபுரம் போலீசார் 4 மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய 3 மாணவர்கள் காரைக்குடி கோர்ட்டில் ஆஜராகினர். அவர்களை கோர்ட்டு சொந்த ஜாமீனில் விடுவித்தது. காயமடைந்த மாணவன் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது முன்ஜாமீன் மனுவினை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி சம்பந்தப்பட்ட போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கல்லூரி பகுதியில் மாணவன் ஒரு வார காலத்திற்கு மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து அந்த மாணவன் காரைக்குடி கல்லூரி சாலையில் நேற்று மாலையில் 2 மணி நேரம் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்