பொதுப்பணித்துறை என்ஜினீயர் பலி

பொதுப்பணித்துறை என்ஜினீயர் பலி

Update: 2023-10-16 19:00 GMT

கோவை

துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கிரிதரன் (வயது 23). கோவை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தங்கியுள்ளார். இந்தநிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

கோவை குறிச்சி அருகே வந்த போது எதிரில் வந்த சரக்கு வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கிரிதரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்