பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
நாஞ்சிக்கோட்டை, புதுப்பட்டினம், விளார் பகுதிகளில் பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
நாஞ்சிக்கோட்டை:
நாஞ்சிக்கோட்டை, புதுப்பட்டினம், விளார் பகுதிகளில் பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
சுற்றித்திரியும் பன்றிகள்
நாஞ்சிக்கோட்டை, புதுப்பட்டினம், விளார் ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாலை நேரங்களில் பன்றிகள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த பன்றிகள் அங்கே கிடக்கும் குப்பைகளை கிளரி போட்டுவிட்டு கழிவுபொருட்களை தின்று விட்டு செல்கின்றன.
கழிவு பொருட்கள் சாலையில் சிதறி கிடப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர்.
பிடிக்க நடவடிக்கை
மேலும் இந்த பன்றிகள் வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை தின்று சேதப்படுத்துகின்றன. பன்றிகள் சாலையில் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாஞ்சிக்கோட்டை, விளார், புதுப்பட்டினம் ஊராட்சிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.